Kan Irandil

1 views

Lyrics

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
 காரணம் இன்றியே நான் சிறித்தேனே
 என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
 வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
 என் உயிரின் உயிரே
 என் இரவின் நிலவே
 உன் அருகில் வரவே
 நீ தருவாய் வரமே
 ஊருக்குள்ள கோடிப்பொண்ணு
 யாரையும் நெனைக்கலையே
 உந்தன் முகம் பார்த்தபின்ன
 எதுவும் பிடிக்கலையே
 உன்னோடைய பார்வையில
 என் ஒடம்பு வேகுதடி
 பக்கத்திலே நீ இருந்தா
 என் வயசு நோகுதடி
 கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
 காரணம் இன்றியே நான் சிறித்தேனே
 என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
 வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
 ♪
 Oh, ஏதோ ஒன்னு சொல்ல
 என் நெஞ்சிக்குழி தள்ள
 நீ பொத்திவெச்ச ஆசை எல்லாம்
 கண்ணுமுன்ன தள்ளாட
 கண்ணாமூச்சி ஆட்டம்
 என் கண்ணுக்குள்ள ஆட
 நீ சொல்லும் சொல்ல கேக்காமலே உந்தன் உள்ளம் திண்டாட
 உள்ளுக்குள்ள பட படக்க
 நெஞ்சிக்குள்ள செறகடிக்க
 கால் இரண்டும் ரெக்ககட்டி
 மேலே கீழே பரபரக்க
 பட்டு பூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே
 ♪
 உன் முத்து முத்து பேச்சு
 என் சங்கீதம்மா ஆச்சு
 உன் சுண்டுவிரல் தீண்டயில
 நின்னுப்போச்சு என் மூச்சு
 பஞ்சிமெத்த மேகம்
 அதில் செஞ்சிவெச்ச தேகம்
 நீ தூரத்திலே நின்னா கூட
 பொங்கிடுதே எம்மொகம்
 முட்டக்கண்ணு மொழி அழகு
 குத்தி குத்தி கொன்னவளே
 சிக்கிக்கிட்ட என் மனசு ஊறவெச்சு துவச்சவளே
 ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போனேனே
 ஊருக்குள்ள கோடிப்பொண்ணு
 யாரையும் நெனைக்கலையே
 உந்தன் முகம் பார்த்தபின்ன
 எதுவும் பிடிக்கலையே
 உன்னோடைய பார்வையில
 என் ஒடம்பு வேகுதடி
 பக்கத்திலே நீ இருந்தா
 என் வயசு நோகுதடி
 கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
 காரணம் இன்றியே நான் சிறித்தேனே
 என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
 வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
 என் உயிரின் உயிரே
 என் இரவின் நிலவே
 உன் அருகில் வரவே
 நீ தருவாய் வரமே
 

Audio Features

Song Details

Duration
04:31
Tempo
157 BPM

Share

More Songs by Naresh Iyer

Albums by Naresh Iyer

Similar Songs