Santhana Malligaiyil
2
views
Lyrics
சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ வேப்பில வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே... கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ இந்த உலகை ஆளும் தாயிக்கு செல்லப் பிள்ள நானிருக்கேன் என் கவலை தீர்க்க வேணாமா கண் வளரு தாயி சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ ♪ பாம்பே தலையணதான் வேப்பிலையே பஞ்சு மெத்த ஆத்தா கண் வளர ஆரிராரோ பாடும் புள்ள எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கெடைக்கல ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல தாயி மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன் பாதம் திருப்பாதம் அதில் நெஞ்ச எடுத்து வச்சேன் சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ ♪ ஒருவாய் சோறு உனக்கு ஊட்டி விட்ட வேளையில உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி அத நான் ருசிப் பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண்வளரு தாலே லல்லேலோ வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ இந்த உலகை ஆளும் தாயிக்கு செல்ல பிள்ள நானிருக்கேன் என் கவலை தீர்க்க வேணாமா கண் வளரு தாயி சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
Audio Features
Song Details
- Duration
- 04:30
- Key
- 5
- Tempo
- 138 BPM