Painkiller

Lyrics

என் அன்பே ஏன்டி விலகி போகுற?
 கண் முன்னே என்ன விட்டுட்டு போகுற
 என் நெஞ்சே வலிய தாங்க முடியில
 உன் உள்ளே உனது உசுர இருக்குற
 உண்ணவும் முடியாமல் உறங்க முடியாமல்
 உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன்
 காலம் கடத்தலும் ஜென்மங்கள் கடந்தாலும்
 உன்னோட வாழத்தானே நினைக்கிறேன்
 என் மனம் ஏங்குதடி வலிக்குதடி
 உன்னை காண துடிக்குதடி
 என் மனம் ஏங்குதடி வலிக்குதடி
 உன்னை காண துடிக்குதடி
 நான் உன்னையே நினைத்து குடும்பத்தை எதிர்த்து
 உன்னோட வாழ்ந்தேனடி
 நான் சிரித்தது பொய்யாக வாழ்ந்தது மெய்யாக
 உன்னுடன் இருப்பேனடி
 உன்னோட இருந்த அந்த ஞாபகம்
 உன் ஞாபகம் என்னை கொல்லும் கண்ணே
 உன்னோட இருந்த அந்த ஞாபகம்
 உன் ஞாபகம் என்னை கொல்லும் கண்ணே
 காதல் வலியில தவிக்கிறேன் துடிக்கிறேன்
 உன்னை மட்டும் இங்கு நினைக்கிறேன்
 வலியில தவிக்கிறேன் துடிக்கிறேன
 உன்னை மட்டும் இங்கு நினைக்கிறேன்
 கதைய எடுத்து உன் கையில குடுத்து
 என்னை சுட்டு தள்ளிரேண்டி என் நாயகி
 கடலுல ஒரு காலு சேத்துல ஒரு காலு
 வச்சது என் தவறு என் நாயகி
 ரெண்டு கண்ணுல எந்த கண்ணு வேணும்னு
 கேட்டாக்கா என்னான்னு சொல்வேனடி
 உடல் வேணுமா என் உயிரு வேணுமானு
 கேட்டாக்கா என்னான்னு சொல்வேனடி
 பாரமானகல்லு மேல கட்டிப்போட்டு கடலு குள்ள எறக்குற
 கடலடியில வந்து இப்ப அணுஅணுவா என்ன கொல்லுற
 தீமிதியில நடக்க சொல்லி உசுர என்னை வாங்குற
 வெந்துபோன கால் பாதத்தை பாத்து இன்பம் இங்க அடையுற
 என் மனம் இன்று உன்னையேதான் எண்ணி இங்க ஏங்குது
 என் மனம் இன்று உன்னையேதான் எண்ணி இன்னும் வாழுது
 மனம் புண்ணானது அது உன்னாலது
 மனம் புண்ணானது அதுவும் உன்னாலது
 மனது ஏதேதோ ஆகின்றது
 நான் பாய் படியில படுத்திருக்குறேன் வீட்டு முன்னாடி நான் காத்திருக்குறேன்
 கண்ணு முழிச்சு நான் எழுந்திருக்கிறேன் தெரிஞ்சுக்கோயேன் டி
 பேசாமலே என்னை சாகடிக்குற வார்த்தையால இப்ப சொல்லி அடிக்குற
 எதையும் தாங்கும் இதயம்னால தாங்கிக்கிறேன் டி
 அந்த சூடத்த தாண்டி வந்து உன் தலையிலே சத்தியம் பண்ண
 ஒரு நிமிஷம் கூட நானும் தயங்கமாட்டேன்டி
 போனாக்க உசுராச்சு நீதான் என் உயிர் மூச்சு
 சூடத்த கையில நீ ஏத்தடி
 மனம் தாங்காதடி தூங்காதடி
 உன்னையே நினைத்து ஏங்குதடி
 பாக்காதடி என்னை பாக்காதடி
 உன் பார்வையால பாத்து கொல்லாதடி
 முள்ளு மேல படுக்க சொல்லு பச்ச குத்தி காட்டச் சொல்லு
 உனக்காக செய்யிருறேனடி
 Bottle'ல ஒடச்சு போட்டு முட்டி போட்டு நடக்க சொல்லு
 அதையும் நான் செய்யுவேனடி
 நீ இல்லாமலே நான் இல்லை
 உன்னை இங்க நினைக்காத இரவு இல்லை
 இங்கு எனக்குனு சொல்லிகவே
 இன்று உன்னை விட்டா யாரும் இல்லை
 ♪
 உன்னோட இருந்த அந்த ஞாபகம்
 உன் ஞாபகம் என்னை கொல்லும் கண்ணே
 உன்னோட இருந்த அந்த ஞாபகம்
 உன் ஞாபகம் என்னை கொல்லும் கண்ணே
 காதல் வலியில தவிக்கிறேன் துடிக்கிறேன்
 உன்னை மட்டும் இங்கு நினைக்கிறேன்
 வலியில தவிக்கிறேன் துடிக்கிறேன
 உன்னை மட்டும் இங்கு நினைக்கிறேன்
 HAVOC மதன் மதன்
 HAVOC மதன், peace
 Havoc brothers, PU4LYF
 

Audio Features

Song Details

Duration
04:22
Key
4
Tempo
172 BPM

Share

More Songs by Havoc Mathan

Albums by Havoc Mathan

Similar Songs