Yedho Ondru Ennai
15
views
Lyrics
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே உன்னை பிரிந்து போகயிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே ♪ என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில் எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில் ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றி போனாய் ஏன் இந்த பிரிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய் உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என் உயிர் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ... பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே உன்னை பிரிந்து போகயிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே உன்னை பிரிந்து போகயிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
Audio Features
Song Details
- Duration
- 03:33
- Key
- 10
- Tempo
- 120 BPM