Palakkattu Pakkathile

4 views

Lyrics

ஏன் இப்படி முகமெல்லாம் வேர்த்துகொற்றது
 நேக்கு தெரியல
 அச்சச்சோ ஏன் இப்படி கையெல்லாம் படபடன்னு நடுங்குறது
 நேக்கு தெரியல
 உக்காருங்கோ
 ♪
 பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
 அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
 ஒரு அம்மான்ஜி ராஜா
 பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
 அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
 ஒரு அம்மான்ஜி ராஜா
 யாரம்மா அது யாரம்மா
 யாரம்மா அது யாரம்மா
 பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி
 அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி
 யாரம்மா அது யாரம்மா
 யாரம்மா அது யாரம்மா
 ♪
 பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளி அறையிலே
 அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்
 சாந்தி என்றால் என்னவென்று ராணியை கேட்டாராம்
 ராணி தானும் அந்த கேள்வியையே ராஜாவை கேட்டாளாம்
 ஏனம்மா அது ஏனம்மா
 ஏனம்மா அது ஏனம்மா
 அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே
 இந்த அனுபவத்தை சொல்லி தர பள்ளியில்லையே
 கவிதையிலும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
 அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
 பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
 அவ சேலை கட்ட பாத்தா போதும் அம்மாமி பானி
 ♪
 பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
 தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
 மரக்கிளையில் அணில் இரண்டு ஆடிட கண்டாராம்
 ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
 ஏனம்மா அது ஏனம்மா
 ஏனம்மா அது ஏனம்மா
 பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தாா்
 அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தாா்
 பாா் கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தாா்
 ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தாா்
 பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
 அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
 ஒரு அம்மான்ஜி ராஜா
 யாரம்மா அது யாரம்மா
 யாரம்மா அது யாரம்மா
 

Audio Features

Song Details

Duration
04:47
Key
7
Tempo
95 BPM

Share

More Songs by Yuvan Shankar Raja

Albums by Yuvan Shankar Raja

Similar Songs