Yaarodu Yaaro

2 views

Lyrics

யாரோடு யாரோ
 இந்த சொந்தம் என்ன பேரோ
 நேற்று வரை நீயும் நானும்
 யாரோ யாரோ தானோ
 ஒர் ஆளில்லா வானில்
 கருமேகங்களின் காதல்
 கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ
 வஞ்சம் கொண்ட நெஞ்சம்
 உருகுது கொஞ்சம்
 சிறுகதை தொடர்கதை ஆகுமோ
 இது என்ன மாயம்
 சூரியனில் ஈரம்
 வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ
 நதி வந்து கடல்மீது சேரும்போது
 புயல் வந்து மலரோடு மோதும்போது
 மழை வந்து வெயிலோடு கூடும்போது
 யாரோடு யாருமிங்கே
 வஞ்சம் கொண்ட நெஞ்சம்
 உருகுது கொஞ்சம்
 சிறுகதை தொடர்கதை ஆகுமோ
 இது என்ன மாயம்
 சூரியனில் ஈரம்
 வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ
 ♪
 இதயங்கள் சேரும்
 நொடிக்காக யாரும்
 கடிகாரம் பார்ப்பது இல்லையே
 நீரோடு வேரும்
 வேரோடு பூவும்
 தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே
 ஓர் உறவும் இல்லாமல்
 உணர்வும் சொல்லாமலே
 புது முகவரி தேடுதோ
 வாய்மொழியும் இல்லாமல்
 வழியும் சொல்லாமல்
 பாசக்கலவரம் சேர்க்குதோ
 ஒரு மின்மினியே மின்சாரத்தை தேடிவரும்போது
 என்ன நியாயம் கூறு
 விதிதானே
 ♪
 பறவைக்கு காற்று
 பகையானால் கூட
 சிறகுக்கு சேதம் இல்லையே
 துளையிட்ட மூங்கில்
 தாங்கிய இரணங்கள்
 இசைக்கின்றபோதும் இன்பமே
 சிறு விதையும் இல்லாமல்
 கருவும் கொள்ளாமலே
 இங்கு ஜனனமும் ஆனதே
 ஒரு முடிவும் இல்லாமல்
 முதலும் இல்லாமல்
 காலம் புதிர்களைப் போடுதே
 அட அருகம்புல்லின் நுனியில் ஏறி
 நிற்கும் பனி போலே
 எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே
 ♪
 வஞ்சம் கொண்ட நெஞ்சம்
 உருகுது கொஞ்சம்
 சிறுகதை தொடர்கதை ஆகுமோ
 

Audio Features

Song Details

Duration
05:22
Key
11
Tempo
100 BPM

Share

More Songs by Yuvan Shankar Raja

Albums by Yuvan Shankar Raja

Similar Songs