Voice Of Unity
2
views
Lyrics
ஒரு நாடிது என்றாலும் பல நாடுகளின் கூடு சிறுபான்மைகள் இல்லாமல் பெரும்பான்மைகள் இங்கேது நதி நீரானது நில்லாது அணையோ தடை சொல்லாது மத மேகங்கள் இங்கேது பொதுவானது நம் நாடு ஜனநாயகம் இல்லாது நம் தாயகம் வெல்லாது இரு நாணயத்தின் பக்கம் அரணாக மொழி நிக்கும் அட இந்து, முஸ்லீம், கிறிஸ்து நம்ம பூர்வக்குடி first'u அட வந்ததம்மா twist'u நம சந்ததிக்கே stress'u நீ வேறாய் நானும் வேறாய் (வேறாய்) நாம் ஆனோம் நான்கு பேராய் (பேராய்) யாராரோ ஆண்டு கொள்ள (கொள்ள) வீராதி வீரம் சொல்ல (சொல்ல) ஆகாயம் ஏறும் காலம் (காலம்) ஆனாலும் ஊரின் ஓரம் (ஓரம்) ஏராளம் கோடி பேர்கள் (பேர்கள்) சேராமல் வாழும் கோலம் (கோலம்) மதம் மாய விட்டா தான் சமுதாயம் முன்னேரும் அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம் சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சம நீதி தந்தாலே சண்டை வராது ♪ கீழக்குல அடிச்சா அது வலிக்கலியே வடக்குக்கு சரித்திரம் படிச்ச அதில் இடமில்லையே மத்தத்துக்கு கடவுள படைச்சு சக சடங்கையெல்லாம் நடத்திட்டு மனுஷன வெறுத்தா அது வரம் தருமா ஜனத்துக்கு (ஜனத்துக்கு) நீ வேறாய் நானும் வேறாய் நாம் ஆனோம் நான்கு பேராய் யாராரோ ஆண்டு கொள்ள வீராதி வீரம் சொல்ல ஆகாயம் ஏறும் காலம் ஆனாலும் ஊரின் ஓரம் ஏராளம் கோடி பேர்கள் சேராமல் வாழும் கோலம் மதம் மாய விட்டா தான் சமுதாயம் முன்னேரும் அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம் சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சம நீதி தந்தாலே சண்டை வராது
Audio Features
Song Details
- Duration
- 03:58
- Key
- 6
- Tempo
- 150 BPM