Unnai Unnai Unnai
2
views
Lyrics
உன்னை உன்னை உன்னை கடலளவு நேசிக்கிறேன் மலையளவு வெறுக்கிறேன் உன்னை உன்னை உன்னைத்தவிற வேறெதுவும் இல்லை இதை உன்னிடம் நான் ஒத்துக்கொள்வதாய் இல்லை தனிமை தனிமை தனிமை இன்றி வேறெதுவும் இல்லை இதை உன்னிடம் நான் ஒத்துக்கொள்ள நீ யோக்கியனில்லை எந்த நேரத்தில் எங்கு நின்றால் நீ வருவாய் என்று எனக்குத் தெரியும் ஆனால் நிற்பதாய் இல்லை எந்த சாலையில் எங்கு திரும்பினால் உன் வீடு வரும் என்று எனக்குத்தெரியும் ஆனால் வருவதாய் இல்லை ♪ நினைத்த நொடியில் நினைத்தபடியே உன் குரலை என்னால் கேட்கவும் முடியும் ஆனால் கேட்பதாய் இல்லை நீ சிரித்து மயக்கும் முகநூல் படங்களுக்கு என் ஆன்மாவில் இருந்து அரைவரி எடுத்து எழுதினால் போதும் நீ like செய்வாய் ஆனால் நான் எழுதுவதாய் இல்லை உன்னை கடலளவு நான் நேசிக்கிறேன் உன்னை மலையளவு நான் வெறுக்கிறேன்... பசு தோல் போர்த்திய புலி நீயா? நானா?
Audio Features
Song Details
- Duration
- 02:56
- Key
- 1
- Tempo
- 80 BPM