Mother Song (From "Valimai")

2 views

Lyrics

நான் பார்த்த முதல் முகம் நீ
 நான் கேட்ட முதல் குரல் நீ
 நான் முகர்ந்த முதல் மலரும் நீயே
 நான் வாழ்ந்த முதல் அறை நீ
 நான் வரைந்த முதல் படம் நீ
 நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
 சினுங்கியபோது சிரிக்க வைத்தாய்
 சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
 சிகரங்கள் ஏற சொல்லி கொடுத்தாய், ஆவலோடு தான்
 வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
 உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
 இமைகளுக்குள்ளே அடைக்காத்தாய் ஆசையோடு தான்
 அம்மா, என் முகவரி நீ அம்மா, என் முதல் வரி நீ அம்மா
 என் உயிர் என்றும் நீ அம்மா
 நீயே எனக்கென பிறந்தாயே, அனைத்தையும் தந்தாயே
 என் உலகம் நீ என் தாயே
 ♪
 உன் வாசம் எனக்கு வலிமை தரும்
 உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
 உன் வாழ்கையின் மேல் என் வாழ்க்கையினை வரைந்து வைத்தாயே
 ஒரு தோல்வி என்னை தொடும் போது
 என் தோளை வந்து தொடுவாயே
 நீ தொட்டதுமே தொடங்கிடுமே எல்லாம் மாறுமே
 விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள்
 இதற்கான காணிக்கையாய் நான் என்னதான் தருவதோ?
 அம்மா, oh அம்மா, அம்மா
 அம்மா, என் முகவரி நீ அம்மா, என் முதல் வரி நீ அம்மா
 என் உயிர் என்றும் நீ அம்மா
 நீயே எனக்கென பிறந்தாயே, அனைத்தையும் தந்தாயே
 என் உலகம் நீ என் தாயே
 

Audio Features

Song Details

Duration
04:01
Key
9
Tempo
130 BPM

Share

More Songs by Yuvan Shankar Raja

Albums by Yuvan Shankar Raja

Similar Songs