En Nenjil

Lyrics

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
 அதன் பேர் என்னவென கேட்டேன்
 என் கண்ணில் ஒரு தீ வந்தது
 அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
 என்ன அது இமைகள் கேட்டது
 என்ன அது இதயம் கேட்டது
 காதல் என உயிரும் சொன்னதன்பே
 காதல் என உயிரும் சொன்னதன்பே
 என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
 பேர் என்னவென கேட்டேன்
 என் தீவில் ஒரு கால வந்தது அந்த
 ஆள் எங்கு என கேட்டேன்
 கண்டுபிடி உள்ளம் சொன்னது
 உன்னிடத்தில் உருகி நின்றது
 காதல் இது உயிரும் சொன்னது அன்பே
 காதல் இது உயிரும் சொன்னது அன்பே
 ♪
 சில நேரத்தில் நம் பார்வைகள்
 தவறாகவே எடை போடுமே
 மழை நேரத்தில் விழி ஓரத்தில்
 இருளாகவே ஒளி தோன்றுமே
 எதையும் எடை போடவே
 இதயம் தடையாய் இல்லை
 புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
 என்னை நீ மாற்றினாய்
 எங்கும் நிறம் பூட்டினாய்
 என் மனம் இல்லையே என்னிடம்
 என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
 அதன் பேர் என்னவென கேட்டேன்
 என் கண்ணில் ஒரு தீ வந்தது
 அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
 ♪
 உன்னை பார்த்ததும் அந்நாளிலே
 காதல் நெஞ்சில் வரவே இல்லை
 எதிர்காற்றிலே குடை போலவே
 சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
 இரவில் உறக்கம் இல்லை
 பகலில் வெளிச்சம் இல்லை
 காதலில் கரைவதும் ஒரு சுகம்
 எதற்கு பார்த்தேன் என்று
 இன்று புரிந்தேனடா
 என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
 என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
 அதன் பேர் என்னவென கேட்டேன்
 என்கண்ணில் ஒரு தீ வந்தது
 அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
 என்ன அது இமைகள் கேட்டது
 என்ன அது இதயம் கேட்டது
 காதல் என உயிரும் சொன்னது அன்பே
 காதல் என உயிரும் சொன்னது அன்பே
 ♪
 காதல் இது உயிரும் சொன்னது அன்பே
 காதல் இது உயிரும் சொன்னது அன்பே
 

Audio Features

Song Details

Duration
05:05
Key
8
Tempo
145 BPM

Share

More Songs by Yuvan Shankar Raja

Albums by Yuvan Shankar Raja

Similar Songs