Aanandha Yaazhai
12
views
Lyrics
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று ♪ ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் ♪ தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்து பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ♪ உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி அதை கையில் பிடித்து, ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
Audio Features
Song Details
- Duration
- 03:37
- Key
- 10
- Tempo
- 120 BPM