Ennavale Adi Ennavale

Lyrics

என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
 எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
 உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன்
 காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்
 எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன்
 என்னவளே அடி என்னவளே
 எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
 ♪
 வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
 வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
 காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷம்டி
 கண்களெல்லாம் எனை பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தொஙருதடி
 இது சொர்க்கமா?, நரகமா? சொல்லடி உள்ளபடி
 நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
 உன் வார்த்தையில் உள்ளதடி
 என்னவளே அடி என்னவளே
 எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
 ♪
 கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
 கோபுரமே உன்னை சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
 வெண்ணிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
 வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
 என் காதலின் தேவையை
 காட்டுக்குள் ஒத்திவைப்பேன்
 உன் காலடி எழுதிய கோலங்கள்
 புது கவிதைகள் என்றுரைப்பேன்
 என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
 எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
 உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன்
 காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்
 எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன்
 என்னவளே அடி என்னவளே
 எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
 
Audio Features

Song Details

Duration
05:12
Key
3
Tempo
97 BPM

Share

More Songs by Unnikrishnan

Albums by Unnikrishnan

Similar Songs