Silendra Theepori ("From Thithikkudhe" )

2 views

Lyrics

சில்லென்ற தீப்பொறி ஒன்று
 சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
 சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா
 இதோ உன் காதலன் என்று
 விறு விறு விருவென கல கல களவென
 அடி மன வெளிகளில் ஒரு நதி நகருது கேட்டாயா
 உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன்
 உயிர் என்னையே தின்னுதே
 உன் ஆடைகள் நான் சூடினேன்
 என்னென்னவோ பண்ணுதே
 தித்திக்குதே தித்திக்குதே
 தித்திக்குதே தித்திக்குதே
 தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நா நா நா நா
 தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நா நா நா நா
 சில்லென்ற தீப்பொறி ஒன்று
 சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
 சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா
 ♪
 கண்ணா உன் காலணி உள்ளே
 என் கால்கள் நான் சேர்ப்பதும்
 கண்மூடி நான் சாய்வதும்
 கனவோடு நான் தோய்வதும்
 கண்ணா உன் கால் உறை உள்ளே
 என் கைகள் நான் தோய்ப்பதும்
 உள் ஊர நான் தேன் பாய் வதும்
 உயிரோடு நான் தேய்வதும்
 முத்து பையன் தேநீர் உண்டு
 மிச்சம் வைத்த கோப்பைகளும்
 தங்க கைகள் உண்ணும் போது
 தட்டில் பட்ட ரேகைகளும்
 மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஓ
 தித்திக்குதே தித்திக்குதே
 தித்திக்குதே தித்திக்குதே
 ♪
 அன்பே உன் புன்னகை கண்டு
 எனக்காக தான் என்று
 இரவோடு நான் எரிவதும்
 பகலோடு நான் உறைவதும்
 நீ வாழும் அரை தனில் நின்று
 உன் வாசம் நாசியில் உண்டு
 நுரை ஈரல் பூ மலருவதும்
 நோய் கொண்டு நான் அழுவதும்
 அக்கம் பக்கம் நோட்டம் விட்டு
 ஆளை தின்னும் பார்வைகளும்
 நேரில் கண்டு உண்மை சொல்ல
 நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
 மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ
 தித்திக்குதே தித்திக்குதே
 தித்திக்குதே தித்திக்குதே
 தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நா நா நா நா
 தித்திக்குதே தித்திக்குதே தித்திக்குதே நா நா நா நா நா
 

Audio Features

Song Details

Duration
05:21
Key
7
Tempo
132 BPM

Share

More Songs by Sujatha

Albums by Sujatha

Similar Songs