Chella Nam Veetttukku (" From Poovellam Un Vaasam" )

4 views

Lyrics

செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு
 நல்லாவே வண்ணம் அடிப்போம்
 சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்
 சின்ன சின்ன செடி வளர்ப்போம்
 இது மாடி வீடு நம் ஜோடி வீடு
 அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
 தெய்வம் வந்து வாழும் வீடு
 செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு
 நல்லாவே வண்ணம் அடிப்போம்
 சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்
 சின்ன சின்ன செடி வளர்ப்போம்
 இது மாடி வீடு நம் ஜோடி வீடு
 அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
 தெய்வம் வந்து வாழும் வீடு
 ♪
 ஜன்னல் வழியே காற்றே வருக
 கதவு வழி செல்வம் வருக
 வாஸ்து பார்த்தே வாசல் வைத்தோம் வாழ்க்கை செழிக்க
 முன்னே காணும் புல்வெளி வாழ்க
 மொட்டை மாடி ரோஜா வாழ்க
 ஊமை தென்றல் ஓடி வரட்டும் ஊஞ்சல் அசைக்க
 எங்கள் இதயம் அடுக்கி வைத்து
 இந்த இல்லங்கள் எழுந்ததம்மா
 நீ சுவரில் காது வைத்தால்
 மன துடிப்பு கேட்கும் அம்மா
 நம் சொந்தம் வளர்ந்திருக்க பந்தம் தொடர்ந்திருக்க
 தலைமுறை இருபது வாழிய நம் வீடு
 செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு
 நல்லாவே வண்ணம் அடிப்போம்
 சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்
 சின்ன சின்ன செடி வளர்ப்போம்
 ♪
 வீடு மனைவி பிள்ளை எல்லாம்
 எல்லாருக்கும் வாய்ப்பதில்லை
 நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம்
 நன்றி சொல்கிறோம்
 இன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால்
 இங்கே ஒரு நாய்குட்டியாக
 வந்து வாழும் வரமே வேண்டும்
 உன்னை கேட்கிறோம்
 இந்த வீடு வந்த நேரம்
 மழை பொன்னாய் பொழிந்ததம்மா
 அந்த மாலை நிழலை போல பந்தபாசம் வளருதம்மா
 இந்த சொந்தம் நெருங்கி வர சொர்க்கம் அருகில் வர
 சூரியன் உள்ளவரை வாழிய நம் வீடு
 செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு
 நல்லாவே வண்ணம் அடிப்போம்
 சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்
 சின்ன சின்ன செடி வளர்ப்போம்
 இது மாடி வீடு நம் ஜோடி வீடு
 அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
 தெய்வம் வந்து வாழும் வீடு
 

Audio Features

Song Details

Duration
04:50
Key
2
Tempo
92 BPM

Share

More Songs by Sujatha

Albums by Sujatha

Similar Songs