Malligai Malligai (" From Arasu")

2 views

Lyrics

மல்லிகை மல்லிகை பந்தலே
 அடி மணக்கும் மல்லிகை பந்தலே
 என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
 கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே
 முந்திரி முந்திரி தோப்புல
 எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
 இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
 எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில
 வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே
 பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
 உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
 கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
 மல்லிகை மல்லிகை பந்தலே
 அடி மணக்கும் மல்லிகை பந்தலே
 என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
 கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே
 ♪
 செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே
 தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே
 பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி
 உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி
 பிழையான வார்த்தை போல வாழ்ந்து வந்தேனே
 உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே
 புரியாத கவிதை போல வாழ்ந்து வந்தேனே
 அவை யாவும் உந்தன் கண்ணில் அர்த்தம் கண்டேனே
 இந்த அருகம்புல்லின் மேல் பனி துளியாய் நின்றாயே
 எந்தன் பருவ தோள்களில் பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
 என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே
 கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே
 ♪
 அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே
 பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே
 கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே
 நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே
 சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே
 அதை ஊதி மெல்ல நானும் அணைத்து சாய்த்தேனே
 மழை தூறும் சாலை ஓரம் உன்னை கண்டேனே
 குடை குள்ளே ஓடி வந்தாய் குடை சாய்ந்தேனே
 உந்தன் விழியில் கண்டேனே எந்தன் கனவை கண்டேனே
 உந்தன் உதட்டை கண்டேனே எந்தன் உணவை கண்டேனே
 உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
 கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
 
 மல்லிகை மல்லிகை பந்தலே
 அடி மணக்கும் மல்லிகை பந்தலே
 என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
 கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே
 முந்திரி முந்திரி தோப்புல
 எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
 இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
 எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில
 

Audio Features

Song Details

Duration
05:12
Key
4
Tempo
81 BPM

Share

More Songs by Sujatha

Albums by Sujatha

Similar Songs