Yennoda Ulagam (From "Kizhakkum Merkkum")
Lyrics
தந்தான தானா தந்தான தானா தந்தான தானா தந்தான தானா என்னோட உலகம் வேறு உன்னோட உலகம் வேறு ரெண்டும் இங்கே சுத்தி வருகுதடி நீ காணும் கனவு வேறு நாங்காணும் கனவு வேறு ரெண்டுலயும் தூக்கம் மறந்ததடி என்னுலகம் உனக்கும் உன்னுலகம் எனக்கும் தூரமிருப்பது ஏன் சொல்லடி சொல்லடி மானே பழி என்னடி என்னடி வீணே சொல்லடி சொல்லடி மானே பழி என்னடி என்னடி வீணே என்னோட உலகம் வேறு உன்னோட உலகம் வேறு ரெண்டும் இங்கே சுத்தி வருகுதடி ♪ செஞ்சதெல்லாம் எண்ணி எண்ணி நெஞ்சம் உருகுது மானே நெஞ்சறிய வஞ்சமில்ல கொஞ்சம் புரிஞ்சுக்க தேனே சீதை அன்று தீக் குளித்தாள் ராமன் சொன்ன சொல்லாலே ஞாயம் என்ன என்று அவள் கேட்டாளா இன்று வந்த சீதை இவள் தீக் குளிக்க சொல்லுகிறாள் உண்மை தன்னை கண்டால் அதைச் சொல்வாளா அன்பு சீதையை கொண்டு வந்தேன் நான் ராவணன் இல்லையடி அந்த உண்மை தெரிந்திடும் நாள் பக்கத்தில் பக்கத்தில் இருக்க மனம் துக்கத்தில் துக்கத்தில் துடிக்க என்னோட உலகம் வேறு உன்னோட உலகம் வேறு ரெண்டும் இங்கே சுத்தி வருகுதடி ♪ தூரத்திலே கேட்கிறதா சின்ன குழந்தையின் சோகம் அன்னையிடம் சொல்கிறதா பசி என்னும் பிஞ்சு ராகம் வேதனையைச் சொல்வதற்கு வார்த்தை ஒன்றும் தேவை இல்லை வேதனைகள் உன்னை என்னைச் சுத்துதடி உள்ளுக்குள்ளே இருவருக்கும் இருப்பதெல்லாம் நீ அறிவாய் நம்மிடத்தில் உண்மை வேடிக்கை காட்டுதடி தின்னை விளக்க நினைப்பதேன் நெஞ்சை அடித்து துவைப்பதேன் மனம் கந்தல் துணியடியோ கண்ணீர் உதிர் காலம் இது காதல் கலி காலம் என்னோட உலகம் வேறு உன்னோட உலகம் வேறு ரெண்டும் இங்கே சுத்தி வருகுதடி நீ காணும் கனவு வேறு நாங்காணும் கனவு வேறு ரெண்டுலயும் தூக்கம் மறந்ததடி என்னுலகம் உனக்கும் உன்னுலகம் எனக்கும் தூரமிருப்பது ஏன் சொல்லடி, சொல்லடி மானே பழி என்னடி என்னடி வீணே சொல்லடி சொல்லடி மானே பழி என்னடி என்னடி வீணே என்னோட உலகம் வேறு உன்னோட உலகம் வேறு ரெண்டும் இங்கே சுத்தி வருகுதடி தந்தநானா தந்தந நானா நா ந நா தந்தனன தந்தந நானா நா ந நா
Audio Features
Song Details
- Duration
- 05:08
- Tempo
- 140 BPM