Adi Aathadi
Lyrics
அடி ஆத்தாடி ♪ அடி ஆத்தாடி இளமனசு ஒன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா அடி அம்மாடி ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அது தானா உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் இவன் மேகம் ஆக யாரோ காரணம் (ஆ-அ-ஆ-அ-ஆ-அ-ஆ) அடி ஆத்தாடி இளமனசு ஒன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா அடி அம்மாடி ♪ மேலப் போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ உன்னைப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டுகட்டிப் பாடாதோ இப்படி நான் ஆனதில்லை புத்தி மாறி போனதில்லை முன்னப் பின்ன நேர்ந்ததில்லை மூக்கு நுனி வேர்த்ததில்லை கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச் சண்டை கண்டாயோ படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ எசை கேட்டாயோ ஓ-ஓ-ஓ-ஓ ♪ லல-லல-லா லல-லல-லா லல-லல-லா லல-லல-லா லல-லல-லா லல-லல-லல-லல-லல-லல-லா ♪ தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம் உண்மைச் சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம் வார்த்தை ஒன்னு வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன கட்டுமரம் பூ பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன கட்டுத்தறி காளை நானே கண்ணுக்குட்டி ஆனேனே தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டு போனேனே ஒரு பொன்மானே ஏ-ஏ-ஏ-ஏ அடி ஆத்தாடி இளமனசு ஒன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா அடி அம்மாடி ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அது தானா உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் இவன் மேகம் ஆக யாரோ காரணம் (ஆ-அ-ஆ-அ-ஆ-அ-ஆ) அடி ஆத்தாடி இளமனசு ஒன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா அடி ஆத்தாடி
Audio Features
Song Details
- Duration
- 04:36
- Key
- 1
- Tempo
- 84 BPM