Yiveleh

Lyrics

அடியே இவளே
 எனக்காக இங்க பிறந்தவளே
 என்னை கொன்னுட்டாலே
 என் அழகே
 நீ செஞ்சு வச்ச தங்க சிலையே
 என்னை செஞ்சிட்டாலே
 ஜொல்லு வடிஞ்சும்
 என் சட்டையிலே தொடச்சேனே
 நீ பாக்கும் முன்னே
 நான் கிறுக்கா
 உன் பின்னாடியே வந்தேனே
 அந்த நாயை போலே
 தேவதை முதல் முறையாக சாலையில் காண்கிறேன்
 கனவா நினைவா என்று என்னையாள் கேக்குதே
 இவ்வளவு அழகா பெண்ணே இதுவரை காணலை
 உன் சதையில நிறமாக இருக்கணும்
 என்று தான் தோன்றுதே
 முதல் முறை எந்தன் மனம் தள்ளாடுதே
 உள்ளுக்குள்ளே பட்டம் பூச்சி கொண்டாடுதே
 அமையாத இந்த விளக்கு அற்புத விளக்கு
 நீதானே என் குத்து விளக்கு
 தப்பா போவாது என் கணக்கு விதி விளக்கு
 நீ கொடுத்திடு ஒரு வாக்கு
 காசு பணம் எல்லாம் எதுக்கு நீ எனக்கு
 சொல்லி ஒரு முறை தலை ஆட்டு
 காதல் மட்டும் போதும் எனக்கு
 கட்டி அணைத்து முத்தம்
 குடுடி கண்ண பார்த்து
 உன்னால நான் தூங்கல நான் தாங்கல
 நீயே ஒரு வழி சொல்லு
 தெரியாத மொழியில நான் பொலம்புறேன்
 அந்த கதையை நீ கேளு
 கண்ணாடி எதிரில நான் சிரிக்கிறேன்
 உன்னைய பேசுறேன் நீ பாரு
 Sugar'uh கொஞ்சம் ஏறுது BP இறங்குது
 உன்ன பார்த்த பின்னால
 அடியே இவளே
 எனக்காக இங்க பிறந்தவளே
 என்னை கொன்னுட்டாலே
 என் அழகே
 நீ செஞ்சு வச்ச தங்க சிலையே
 என்னை செஞ்சிட்டாலே
 ஜொல்லு வடிஞ்சும்
 என் சட்டையிலே தொடச்சேனே
 நீ பாக்கும் முன்னே
 நான் கிறுக்கா
 உன் பின்னாடியே வந்தேனே
 அந்த நாயை போலே
 மயில் இறகை எடுத்து
 ஒரசுறேன் நான் கெஞ்சுறேன்
 நீ என் பக்கம் வா
 உன்கூட வந்து பேச எனக்கு வெட்கம்
 பக்கத்தில் நிக்க கூடுது இப்ப தயக்கம்
 உன் கைய புடித்ததும் மனம் ஏங்குது
 உன்னை நினைக்காமல் போனால்
 கண்கள் உன்னை தேடுது
 இதயமும் இதயமும் ஒன்று சேர்ந்ததும்
 என் மனதில் நுழைந்து
 உன் நினைவுகள் கொல்லுது
 எவன் என்ன சொன்னாலும்
 என் வழியில் போவேனே
 குறுக்கிட வந்தாலும்
 என் வழியில் போவேனே
 தெரிஞ்சுருச்சு கதை இருக்கு
 மாமனுக்கு வீரம் இருக்கு
 உன்கூட வாழ்வதிற்கு
 உசுரையும் குடுப்பேன் உனக்கு உனக்கு
 ♪
 இவள் எனக்கே எனக்கென பிறந்தவளே
 இந்த ஆண் மகன் மனதை பறித்தவளே
 இவள் வலியை கொடுத்தாள் இதயத்திலே
 இந்த இறைவன் படைத்த பொன்மகளே
 என் காலு தரையிலே படவில்லே
 நான் மழையிலே நனையிறேன்
 உன் நினைவுல உருகுறேன்
 நான் கிறுக்கனா அலையுறேன்
 ஏண்டி என்னை பாக்குற
 கண்ணால பேசுற
 ஏண்டி இப்ப சிரிக்கிற
 பைத்தியமா ஆக்குற
 உன்னோட கனவில் நான் மட்டும் வரணும்
 என்றுமே நான் வேண்டுவேன்
 ஒவ்வொரு இரவில் உன் கைய புடிக்க
 மட்டும் தான் நான் ஏங்குவேன்
 உன் கண்ணுக்கு கண்ணாக நான் இருப்பேன்
 உன் மஞ்சத்தில் நான் கலந்து இருப்பேன்
 உன் நெத்தியில் பொட்டாக நான் இருப்பேன்
 அந்த சந்தனம் குங்குமமா வருவேன்
 என் அழகே
 உன் விழியே
 அடியே இவளே
 எனக்காக இங்க பிறந்தவளே
 என்னை கொன்னுட்டாலே
 என் அழகே
 நீ செஞ்சு வச்ச தங்க சிலையே
 என்னை செஞ்சிட்டாலே
 ஜொல்லு வடிஞ்சும்
 என் சட்டையிலே தொடச்சேனே
 நீ பாக்கும் முன்னே
 நான் கிறுக்கா
 உன் பின்னாடியே வந்தேனே
 அந்த நாயை போலே
 

Audio Features

Song Details

Duration
04:57
Key
11
Tempo
97 BPM

Share

More Songs by Havoc Brothers

Albums by Havoc Brothers

Similar Songs