Thamirabarani

2 views

Lyrics

தாமிரபரணியில் நீந்தி வந்த...
 என் ஆவாம் பூவிலையே...
 ஆயிரம் கனவ நீ வெதச்சுப் புட்டு
 கை வீசி போறவளே
 கரட்டு காட்டுக்குள்ள மொளச்ச நெல்ல போல
 மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச
 எதுக்கு குத்த வச்ச மனச பத்த வச்ச
 கொசுவம் போல என்ன பின்ன வச்சு முடியடியே
 பெரும் காமுடியே
 அடியே உருவாஞ்சுருக்கே
 ♪
 பத்துப் பனிரெண்டு மணி வர நானும்
 கண்ட படி திரிஞ்சேன்
 பொட்டப் புள்ள இவ பாத்துட்டு போனா
 பொட்டிக்குள்ள அடஞ்சேன்
 ஒத்தத் துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி
 இஷ்டத்துக்கு கெடந்தேன்
 பொட்டுக் கன்னி இவ சிரிச்சிட்டு போனா
 எட்டு மொற குளிச்சேன்
 மருதானி எல போல என் மனச நசுக்குறே
 அருக்கானி அழகா தான் என் உசுர குடிக்குறே
 ராட்டின தூரிய போல என்ன
 அடி ஏண்டி உருள விட்ட
 பொள்ளாச்சி சூட்டு தச்சி
 கண்காச்சி பாக்கையில
 அன்னாசி பழம் போல
 என்ன வெட்டி தின்ன அடி...
 அடியே கொடுவா நுனியே...
 அடியே கருவா ஒளியே...
 ♪
 சல்லிப் பய இவன் மனசுல நீ தான்
 மல்லிச் செடிய வச்சே
 ஓட்டக் காசு என்ன உருப்படியாக்கி
 நெஞ்சுக் குழியில் வச்சே
 அடிப் போடி ஒன்ன பாத்தா
 ஒரு கிறுக்கு புடிக்குதே
 தல மேல ஒரு மேகம்
 அட தமுக்கு அடிக்குதே
 கோழிய போல என் உறக்கத்த நீ
 அட வெரச முழுங்குறியே
 வித்தாரக் கள்ளி ஒன்ன
 கொத்தாக அள்ளி வந்து
 பொத்தான போட்டுச் சின்ன
 நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா
 தனியே தனியே
 அருவா மினுங்கும் விழியே
 

Audio Features

Song Details

Duration
04:55
Key
11
Tempo
112 BPM

Share

More Songs by C. Sathya

Albums by C. Sathya

Similar Songs