Malai pozhudiloru

Lyrics

மாலை பொழுதிலொரு மேடை மிசையே
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 ♪
 மாலை பொழுதிலொரு மேடை மிசையே
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 ♪
 மூலைக் கடலினை அவ்வான வளையம்
 முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
 மூலைக் கடலினை அவ்வான வளையம்
 முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
 மாலை பொழுதிலொரு மேடை மிசையே
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 ♪
 நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
 நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
 நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
 நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
 சாலப் பலபல நற் பகற்கனவில்
 தன்னை மறந்தலயந்தன்னில் இருந்தேன்
 மாலை பொழுதிலொரு மேடை மிசையே
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 மூலைக் கடலினை அவ்வான வளையம்
 முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
 ♪
 ஆங்கப் போழுதிநிலென் பின்புறத்திலே
 ஆள் வந்து நின்றெனது கண் மறைக்கவே
 ஆங்கப் போழுதிநிலென் பின்புறத்திலே
 ஆள் வந்து நின்றெனது கண் மறைக்கவே
 பாங்கினிற் கையிரண்டும் தீண்டியறிந்தேன்
 பட்டுடை வீசு கமழ் தன்னிலறிந்தேன்
 பாங்கினிற் கையிரண்டும் தீண்டியறிந்தேன்
 பட்டுடை வீசு கமழ் தன்னிலறிந்தேன்
 ♪
 ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன்
 ஒட்டு மிரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்
 ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன்
 ஒட்டு மிரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்
 வாங்கி விடடி கையை யேடி கண்ணம்மா
 மாயம் எவரிடத்தில்? என்று மொழிந்தேன்
 மாலை பொழுதிலொரு மேடை மிசையே
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 மாலை பொழுதிலொரு மேடை மிசையே
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 மாலை பொழுதிலொரு மேடை மிசையே
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
 

Audio Features

Song Details

Duration
05:52
Key
11
Tempo
74 BPM

Share

More Songs by Bombay Jayashri

Albums by Bombay Jayashri

Similar Songs