Merke Merke ( From" Kanda Naal Mudhalai")

Lyrics

லை லை லை லை லாய் லாய் லாய்
 லாஹி லாஹி லாஹிலே
 மேற்கே, மேற்கே, மேற்கே தான்
 சூரியன்கள் உதித்திடுமே
 சுடும் வெயில் கோடைக்காலம்
 கடும் பனி வாடைக்காலம்
 இரண்டுக்கும் நடுவே ஏதும், காலம் உள்ளதா
 இலையுதிர் காலம் தீர்ந்து
 எழுந்திடும் மண்ணின் வாசம்
 முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
 ஓ மின்னலும் மின்னலும்
 நேற்று வரை பிரிந்தது ஏனோ
 பின்னலாய்ப் பின்னலாய்
 இன்றுடன் பிணைந்திடத் தானோ
 லை லை லை லை லாய் லாய் லாய்
 லாயே லாயே லாய் லாய் லாய்
 மேற்கே, மேற்கே, மேற்கே தான்
 சூரியன்கள் உதித்திடுமே
 ♪
 ஓ கோபம் கொள்ளும் நேரம், வானம் எல்லாம் மேகம்
 காணாமலே போகும் ஒரே நிலா
 ஓ கோபம் தீரும் நேரம், மேகம் இல்லா வானம்
 பெளர்ணமியாய்த் தோன்றும் அதே நிலா
 இனி எதிரிகள் என்றே எவருமில்லை
 பூக்களை விரும்பா வேர்களில்லை
 நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
 இது நீரின் தோளில் கைபோடும்
 ஒரு சின்னத் தீயின் கதையாகும்
 திரைகள் இனிமேல் தேவையில்லையே
 மேற்கே, மேற்கே, மேற்கே தான்
 சூரியன்கள் உதித்திடுமே
 லை லை லை லை லாய் லாய் லாய்
 லாஹி லாஹி லாஹிலே
 ♪
 வாசல் கதவை யாரோ, தட்டும் ஓசை கேட்டால்
 நீதான் என்று பார்த்தேனடி சகி
 பெண்கள் கூட்டம் வந்தால், எங்கே நீயும் என்றே
 இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
 இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
 காற்றே சிறகாய் விரிந்திடுமோ
 நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ
 அட தேவைகள் இல்லை என்றாலும்
 வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
 மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
 மேற்கே, மேற்கே, மேற்கே தான்
 சூரியன்கள் உதித்திடுமே
 லை லை லை லை லாய் லாய் லாய்
 சூரியன்கள் உதித்திடுமே
 மின்னலும் மின்னலும்
 நேற்று வரை பிரிந்தது ஏனோ
 பின்னலாய்ப் பின்னலாய்
 இன்றுடன் பிணைந்திடத் தானோ
 

Audio Features

Song Details

Duration
05:07
Key
5
Tempo
80 BPM

Share

More Songs by Shankar Mahadevan

Albums by Shankar Mahadevan

Similar Songs