Unnai Allai
Lyrics
உனைக்காணவே உயிர் ஏங்குதே நிழல் பூவிலே நிஜம் தேடுதே தனிதீவிலே மனம் வாடுதே காதலிலே தேய்பிறையும் தோன்றியதே மெய்தாகமே உயிர் பாவயாய் தொலைதூரமாய் துணை பூத்ததே எனக்காவே விதி சேர்த்ததே ஞாபகமோ தாகமதில் காய்கிறதே விதவிதமாய் சுகங்களிலே மிதந்தோம் இதம் இதமாய் இதயத்திலே இணைந்தோம் காலைப்பூவைப் போல வாசம் வீசினோம் பேசிப்பேசி காதல்தான் ஊற மீண்டும் சாரல் போல சேர வேண்டுமே உனைக்காணவே உயிர் ஏங்குதே நிழல் பூவிலே நிஜம் தேடுதே தனிதீவிலே மனம் வாடுதே காதலது தேய்பிறையாய் தேய்கிறதே மனம் தானாய் நோக தினம் வாழ்வே வீணாக விடை ஏதும் பாராமல் விதி காட்டுதே போராக விழி பாவை விரல் கோர்க்க விரைந்தோடிப் போராட வழித்தேட புதுப்பாதை இசை காட்டுதே உனக்காகவே உயிர் வாழ்கிறேன் நிழல் பூவிலே நிஜம் பார்க்கிறேன் இனிதாகவே இதம் தோன்றுதே காதலிங்கு முழு நிலவாய் மாறியதே மெழுகாகவே உயிர் பாதையே கொடும் தூரத்தில் துணையானதே எனக்காகவே விதி சேர்த்ததே ஓவியமாய் காதலது மாறியதே
Audio Features
Song Details
- Duration
- 12:41
- Key
- 1
- Tempo
- 165 BPM