Putham Puthu Kaalai - Alaigal Oyvatillai / Soundtrack Version
2
views
Lyrics
புத்தம் புது காலை பொன் நிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுக ராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் புத்தம் புது காலை பொன் நிற வேளை பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயில் ஓசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள் புத்தம் புது காலை பொன் நிற வேளை வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் வளர்ந்தாடுது இசை பாடுது வழிந்தோடிடும் சுவை கூடுது புத்தம் புது காலை பொன் நிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுக ராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
Audio Features
Song Details
- Duration
- 04:33
- Key
- 2
- Tempo
- 121 BPM