Mayilrage (From "Ah…Aah")

Lyrics

மயிலிறகே மயிலிறகே
 வருடுகிறாய் மெல்ல
 மழை நிலவே மழை நிலவே
 விழியில் எல்லாம் உன் உலா
 உயிரை தொடர்ந்து வரும்
 நீதானே மெய் எழுத்து
 நான் போடும் கை எழுத்து அன்பே
 உலக மொழியில் வரும்
 எல்லாமே நேர் எழுத்து
 காதல்தான் கண் எழுத்து அன்பே
 மயிலிறகாய் மயிலிறகாய்
 வருடுகிறாய் மெல்ல
 மழை நிலவே மழை நிலவே
 விழியில் எல்லாம் உன் உலா
 மதுரை பொதிகை மறந்து
 உன் மடியினில் பாய்ந்தது வைகை
 மெதுவா மெதுவா மெதுவா
 இங்கு வைகையில் வைத்திடு கை
 பொதிகை மலையை பிரித்து
 என் பார்வையில் நீந்துது தென்றல்
 அதை நான் அதை நான் பிடித்து
 மெல்ல அடைத்தேன் மனசிறையில்
 ஓர் இலக்கியம் நம் காதல்
 வான் உள்ள வரை வாழும் பாடல்
 மயிலிறகே மயிலிறகே
 வருடுகிறாய் மெல்ல
 மழை நிலவே மழை நிலவே
 விழியில் எல்லாம் உன் உலா
 உயிரை தொடர்ந்து வரும்
 நீ தானே மெய் எழுத்து
 நான் போடும் கை எழுத்து அன்பே
 உலக மொழியில் வரும்
 எல்லாமே நேர் எழுத்து
 காதல்தான் கண் எழுத்து அன்பே
 தமிழா தமிழா தமிழா
 உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
 அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய்
 கவி ஆற்றிட நீ வருவாய்
 ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
 அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
 உனக்கும் எனக்கும் விருப்பம்
 அந்த மூன்றாம் பால் அல்லவா
 பால் விளக்கங்கள் நீ கூறு
 ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கேளு
 மயிலிறகே மயிலிறகே
 வருடுகிறாய் மெல்ல
 மழை நிலவே மழை நிலவே
 விழியில் எல்லாம் உன் உலா
 உயிரை தொடர்ந்து வரும்
 நீ தானே மெய் எழுத்து
 நான் போடும் கை எழுத்து அன்பே
 உலக மொழியில் வரும்
 எல்லாமே நேர் எழுத்து
 காதல்தான் கண் எழுத்து அன்பே
 மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல
 வருடுகிறாய் மெல்ல
 வருடுகிறாய் மெல்ல
 வருடுகிறாய் மெல்ல
 வருடுகிறாய் மெல்ல
 

Audio Features

Song Details

Duration
05:22
Key
8
Tempo
122 BPM

Share

More Songs by Madhusree

Albums by Madhusree

Similar Songs