Kan Rendum
Lyrics
கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது என் அன்பே வா முன்பே காத்தாடி போலவே என் நெஞ்சமே உன் கைகளில் அது தஞ்சமே இந்த நாள் அடி இந்த நாள் என் இதயத்தில் தொடர்ந்து வரும் கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது என் அன்பே வா முன்பே ♪ ஆண் மனம் வெளிக் காட்டிப் பேசும் பெண் மனம் திரை மூடிப் பேசும் பூவுக்குள் இருக்கின்ற வாசம் காற்றுக்கு கடிதங்கள் வீசும் அடி மௌனத்தின் மொழிகளே காதலின் முகவரி மனம் இன்று அறிகின்றதே கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது என் அன்பே வா முன்பே ♪ எது வரை எனைக் கூட்டிப் போவாய் அது வரை உடன் சேர்ந்து வருவேன் உலகத்தை மறந்தொடிப் போவோம் கனவில் மிதந்தோடிப் போவோம் அடி மறுபடி மறுபடி உன்னிடம் தோற்றிட மனதிற்கு பிடிக்கிறதே கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது என் அன்பே வா முன்பே காத்தாடி போலவே என் நெஞ்சமே உன் கைகளில் அது தஞ்சமே இந்த நாள் அடி இந்த நாள் என் இதயத்தில் தொடர்ந்து வரும் ♪ என் அன்பே
Audio Features
Song Details
- Duration
- 02:54
- Tempo
- 100 BPM