Yedo Yedo (From "Ennakku 20 Unakku 18")
Lyrics
ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே உயிரே இதயம் உனக்கே உனக்கே ♪ உன்னை போல் ஒரு பெண்ணின் அருகிலே மௌனம் கொல்வது கஷ்டம் நாம் பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம் சொற்கள் என்பதில் மிஞ்சும் மொத்தமும் மௌனம் என்பதில் உள்ளது உள்ளது மௌன மிஞ்சினால் பேசிவிடுவதே நல்லது சூரியனை போலே என் முன்பு வந்தாய் பனி துளி போலே பணிந்து விட்டேனே உயிரே இதயம் உனக்கே உனக்கே ♪ கனவாய் இருந்தால் எதிலே இருப்போம் நிஜமாய் இருந்தால் இன்னும் கேட்போம் கனவாய் இருந்தால் எதிலே இருப்போம் நிஜமாய் இருந்தால் இன்னும் கேட்போம் ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே ♪ உள்ளே போகிற சுவாசம் என்பது வெளியில் வருவது நியாயம் நியாயம் வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம் கண்கள் காண்கிற கனவு என்பது கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும் வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம் போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேனே உயிரே இதயம் உனக்கே உனக்கே ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து செல்லமாக மிரட்டி செல்கிறதே
Audio Features
Song Details
- Duration
- 05:46
- Key
- 8
- Tempo
- 91 BPM