Oru Maalai

Lyrics

ஒரு மாலை இளவெயில் நேரம்
 அழகான இலை உதிர் காலம்
 ஒரு மாலை இளவெயில் நேரம்
 அழகான இலை உதிர் காலம்
 சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
 அங்கே தொலைந்தவன் நானே
 சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
 அங்கே தொலைந்தவன் நானே
 அவள் அள்ளி விட்ட பொய்கள்
 நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
 இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
 அவள் நின்று பேசும் ஒரு தருணம்
 என் வாழ்வில் சக்கரை நிமிடம்
 ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே (கண்டேனே, கண்டேனே)
 ஒரு மாலை இளவெயில் நேரம்
 அழகான இலை உதிர் காலம்
 சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
 அங்கே தொலைந்தவன் நானே
 சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
 அங்கே தொலைந்தவன் நானே
 ♪
 பார்த்து பழகிய நான்கு தினங்களில்
 நடை உடை பாவணை மாற்றிவிட்டாய்
 சாலை முனைகளில் துரித உணவுகள்
 வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டிவிட்டாய்
 கூச்சம் கொண்ட தென்றலா?
 இவள் ஆயுள் நீண்ட மின்னலா?
 உனக்கேற்ற ஆளாக என்னை மாற்றிக் கொண்டேனே
 ஒரு மாலை இளவெயில் நேரம் (Alleluia)
 அழகான இலை உதிர் காலம்
 சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
 அங்கே தொலைந்தவன் நானே
 சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
 அங்கே தொலைந்தவன் நானே
 ♪
 பேசும் அழகினை கேட்டு ரசித்திட
 பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
 தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட
 இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
 பனியில் சென்றால் உன் முகம்
 என் மேலே நீராய் இறங்கும்
 ஓ தலை சாய்த்து பார்த்தாளே தடுமாறி போனேனே
 ♪
 சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
 அங்கே தொலைந்தவன் நானே
 சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
 அங்கே தொலைந்தவன் நானே
 அவள் அள்ளி விட்ட பொய்கள்
 நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
 இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
 அவள் நின்று பேசும் ஒரு தருணம்
 என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்
 ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
 

Audio Features

Song Details

Duration
05:54
Tempo
112 BPM

Share

More Songs by Karthik

Albums by Karthik

Similar Songs