Azhaipaya Azhaipaya - Reprise

6 views

Lyrics

விழுந்தேனா தொலைந்தேனா
 நிறையாமல் வழிந்தேனா
 இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்
 சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்
 கால் இல்லா ஆமை போல் காலம் ஓடுதே
 இங்கே உன் இன்மை உணர்கிற போது
 ஒரே உண்மையை அறிகிறேன் நானே
 எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது
 உன் நெஞ்சிலும் உண்டா
 என்றெண்ணி இருதயம் துடிக்குதே
 அழைப்பாயா அழைப்பாயா
 நொடியேனும் அழைப்பாயா
 பிடிவாதம் பிடிக்கின்றேன்
 முடியாமலே அழைப்பாயா
 அழைப்பாயா அழைப்பாயா
 படிக்காமல் கிடக்கின்றேன்
 கடிகாரம் கடிக்கின்றேன்
 விடியாமலே அழைப்பாயா
 ♪
 நான் என்ன பேச வேண்டும்
 என்று சொல்லிப் பார்த்தேன்
 நீ என்ன கூற வேண்டும்
 என்றும் சொல்லிப் பார்த்தேன்
 நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்
 ஓடவிட்டுப் பார்த்தேன்
 நீ எங்கு புன்னகைக்க வேண்டும்
 என்று கூட சேர்த்தேன்
 நிலைமை தொடர்ந்தால்
 என்ன நான் ஆகுவேன்
 மறக்கும் முன்னே அழைத்தால்...
 பிழைப்பேன்...
 அழைப்பாயா அழைப்பாயா
 அலைபேசி அழைப்பாயா
 தலைகீழாய் குதிக்கின்றேன்
 குரல் கேட்கவே அழைப்பாயா
 அழைப்பாயா அழைப்பாயா
 நடுஜாமம் விழிக்கின்றேன்
 நாட்காட்டி கிழிக்கின்றேன்
 உனைப் பார்க்கவே அழைப்பாயா...
 ♪
 ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே
 என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே
 என் நாசி மீது வீசி விட்ட மாயமான வாசம் போலே
 நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே
 சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
 இதயம் இங்கே வேற் ஏதோ நேருதே...
 அழைப்பாயா அழைப்பாயா
 தவறாமல் அழைப்பாயா
 தவறாக அழைத்தாலும்
 அது போதுமே அழைப்பாயா
 அழைப்பாயா அழைப்பாயா
 ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ
 அழைப்பாயா அழைப்பாயா
 மொழியெல்லாம் கரைந்தாலும்
 மௌனங்கள் உரைத்தாலே
 அது போதுமே அழைப்பாயா... ஆஅ...
 

Audio Features

Song Details

Duration
04:14
Key
8
Tempo
88 BPM

Share

More Songs by Karthik

Albums by Karthik

Similar Songs