Kangal Neeye
Lyrics
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீா்த்தாயே எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன் நான் தான் நீ வேறில்லை முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்தத்தால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ ♪ இந்த நிமிடம் நீயும் வளா்ந்து என்னை தாங்க ஏங்கினேன் அடுத்த கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன் தோளில் ஆடும் சேலை தொட்டில் தான் பாதி வேளை பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையாக பல பல ஓசை செய்திடும் ராவணன் ஈடில்லா என் மகன் ம்-ம் ம்-ம்-ம் எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்ணே எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள் என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே ♪ என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளிப் போனால் தவிக்கிறேன் மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன் போகும் பாதை நீளம் கூரையாய் நீல வானம் சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ நான் கொள்ளும் கா்வம் நீ ஒ-ஒ ஒ-ஒ-ஒ-ஒ கடல் ஐந்தாறு மலை ஐநூறு இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை உடல் செவ்வாது பிணி ஒவ்வாது பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ
Audio Features
Song Details
- Duration
- 05:40
- Key
- 4
- Tempo
- 100 BPM