Yemma Yea Alagamma (From "Vanamagan")

Lyrics

எம்மம்மா அழகம்மா
 இருதயம் இருதயம் மெழுகம்மா
 எம்மா நீ அழகம்மா
 விரல்பட விரல்பட இளகம்மா
 எம்மா நீ அழகம்மா
 விழிகளில் நாணங்கள் விலகம்மா
 எம்மா நீர் புகழம்மா
 இவனது தாய்மொழி பழகம்மா
 யாரே நீ எங்கிருந்து வந்தாய்
 என் நெஞ்சில் சிறகு தந்தாய்
 யாரோ நீ பூந்துயிலில் வந்தாய்
 என் கண்ணில் கனவு தந்தாய்
 ஒரு சில நொடி குழந்தையைப்போலே
 மறு சில நொடி கடவுளைப்போலே
 பல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானா... ய்
 உயிரினை தரும் உதிரத்தை போலே
 உயரத்தை தொடும் சிகரத்தை போலே
 அனு தினம் தினம் அதனினும் பெரிதாய்
 நீ ஆனாய்
 எம்மா ஏ அழகம்மா
 இருதயம் இருதயம் மெழுகம்மா
 எம்மா நீ அழகம்மா
 விரல்பட விரல்பட இளகம்மா
 எம்மா ஏ அழகம்மா
 விழிகளில் ஆனந்தம் விலகம்மா
 எம்மா நீ தமிழம்மா
 இவனது தாய்மொழி பழகம்மா
 வேறேதோ தூவுலகம் ஒன்றில்
 இவனாலே பூக்கிறேனா
 ஊனுல்லா மின்னுணர்வு ஒன்று
 இவனாலே பாயிறேனா
 இவனிடம் பணம் ஒரு துளி இல்லை
 மனிதரின் குணம் சிறு துளி இல்லை
 இவனிடம் மனம் முழுவதும் முழுவதும் தந்தேனே
 திரை விலகிய மேடையைப்போலே
 பனி விலகிய கோடையைப்போலே
 மழை நனைந்திடும் ஆடையைப்போலே ஆனேனே
 எம்மா ஏ அழகம்மா
 இருதயம் இருதயம் மெழுகம்மா
 எம்மா நீ அழகம்மா
 விரல்பட விரல்பட இளகம்மா
 எம்மா ஏ அழகம்மா
 விழிகளில் ஆனந்தம் விலகம்மா
 எம்மா நீ தமிழம்மா
 இவனது தாய்மொழி பழகம்மா
 மரம் செடி கொடிகளை அனைத்தாயே
 மலர்களின் இதழ்களை தொடைத்தாயே
 உன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய்
 வனங்களின் மகனெனப்பிறந்தாயே
 புலிகளின் மடியினில் வளர்ந்தாயே
 மான் என்னை நான் தந்தாய் என் செய்வாய்
 வாராளே உன்னை உன்போல் ஏற்றியே
 ஆனாலும் உண்மை என்னென்றுக்கேட்டேனே
 உரைந்திடு யாரோ நீ
 யாரே நீ எங்கிருந்து வந்தாய்
 என் நெஞ்சில் சிறகு தந்தாய்
 யாரோ நீ பூந்துயிலில் வந்தாய்
 என் கண்ணில் கனவு தந்தாய்
 ஒரு சில நொடி குழந்தையைப்போலே
 மறு சில நொடி கடவுளைப்போலே
 பல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானா... ய்
 உயிரினை தரும் உதிரத்தை போலே
 உயரத்தை தொடும் சிகரத்தை போலே
 அனு தினம் தினம் அதனினும் பெரிதாய்
 நீ ஆனாய்
 எம்மா ஏ அழகம்மா
 இருதயம் இருதயம் மெழுகம்மா
 எம்மா நீ அழகம்மா
 விரல்பட விரல்பட இளகம்மா
 எம்மா ஏ அழகம்மா
 விழிகளில் ஆனந்தம் விலகம்மா
 எம்மா நீ தமிழம்மா
 இவனது தாய்மொழி பழகம்மா
 

Audio Features

Song Details

Duration
05:28
Tempo
82 BPM

Share

More Songs by Bombay Jayashri

Albums by Bombay Jayashri

Similar Songs