Thendral Vanthu
Lyrics
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல ♪ எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ♪ ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன? வண்ணங்கள் என்ன என்ன? தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல
Audio Features
Song Details
- Duration
- 05:22
- Key
- 4
- Tempo
- 130 BPM