Sattru Munbu

Lyrics

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
 காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
 சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
 காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
 நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
 ஒ ஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
 எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ
 சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
 காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
 ♪
 ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
 தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
 வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
 தேங்கி போன ஒரு நதியென இன்று நானடா
 தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
 தனந்தனி காட்டில் இன்பம் காண வாடா
 சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
 காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
 ♪
 சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா
 சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா
 ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா
 காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா
 தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா
 தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே
 சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
 காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
 நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
 ஒ ஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
 எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ
 சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
 காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
 

Audio Features

Song Details

Duration
05:57
Key
10
Tempo
109 BPM

Share

More Songs by Ilaiyaraaja

Albums by Ilaiyaraaja

Similar Songs