Ennai Thottu
Lyrics
ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி அன்பே ஓடி வா அன்பால் கூடவா ஓ பைங்கிளி நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி ♪ சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னைச்சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித்தர தானாக வந்துவிடு என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பாணத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றித்தந்துவிடு அன்பே ஓடி வா அன்பால் கூடவா அன்பே ஓடி வா அன்பால் கூடவா ஓ பைங்கிளி நிதமும் என்னைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி ♪ ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டிவிட்டு கண்சிரிக்கும் சுந்தரியே அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணை கட்டி வைத்த பைங்கிளியே என்னில் நீயடி உன்னில் நானடி என்னில் நீயடி உன்னில் நானடி ஓ பைங்கிளி நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி அன்பே ஓடி வா அன்பால் கூடவா ஓ பைங்கிளி நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
Audio Features
Song Details
- Duration
- 05:00
- Tempo
- 116 BPM